பார்வையிட்டவர்கள்

இறை பிரார்த்தனையின் அடித்தளம்.

Tuesday, January 19, 2010

காலை பிரார்த்தனை

காலையில் எழுந்தவுடன் நாம் கைகளால் முகத்தை துடைப்போம்/கண்களை கசக்கவும் செய்யலாம்...இப்படி நாம் தினமும் அந்த கைகளில் இறைவனை நினைத்து கொண்டு ஸ்லோகமும் சொல்லலாம் என்பதை இந்த பதிவுல புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கையோடு அந்த நாளை நாம் இறைவழிபாடு செய்து துவங்குகிறோம்...நன்மையாக அமையும்.
நன்றி.




Monday, January 18, 2010

விநாயகர்


ஆதி காலத்தில் தோன்றிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை பற்றியும் குருபூர்ணிமைவை பற்றியும் நாம் தெரிந்து கொண்டோம்.இன்று முழு முதற் கடவுளாக வணங்கும் பிள்ளையாரை பற்றி காண்போம்.நாம் எந்த ஒரு காரியம் தொடங்கும் முன்னர் முதலில் வழிபட வேண்டிய பிள்ளையாருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்,அதனுடைய கதை மற்றும் சில விளக்கங்களையும் கீழே பதிவு செய்கிறேன். நன்றி.

Sunday, January 17, 2010

திருவிழா.....(1)

பல வேற்றுமைகளுக்குக்கிடையே ஒற்றுமை காணும் உயர்ந்த பண்பை உடையது இந்தியா.

சமயப்பிரிவுகளில் ஒவ்வொன்றும் அதற்கே உரிய நம்பிக்கைகளையும் புராணாங்களையும் கொண்டுள்ளது.


இந்நம்பிக்கைகள் பல வேறு விதமான வழிபாடுகளிலும் திருவிழாக்களிலும் பெரும்மைப்படுத்தப்படுகின்றன.

திருவிழாக்கள் சமூக வாழ்வு
க்கு உயிரூட்டுகின்றன.

பொதுவான இறந்த கால நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்து நினைப்பதாலும்,குறிபிடத்தக்க
நிகழ்ச்சிகளைப் பலரையும் கூட்டிச் சந்தோஷமாகக் கொண்டாடுவதாலும்,அவை மக்களை ஒற்றுமைப்படுத்துகின்றன.

உலகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள திருவிழாக்களைப் போலவே
இந்தியத் திருவிழாக்களும் மக்களுக்கு வாழ்வில்லுள்ள உற்சாகம்,இயற்கையிலுள்ள் பேரின்பம்,பகட்டான காட்சிகளில் ப்ரியம் இவற்றை வெளிப்படுத்துகின்றன.

இந்திய பஞ்சாங்கம் திருவிழாக்களின் நீண்ட பட்டியலைக் கொண்டது.
அத்திருவிழாக்கள் எண்ணிக்கையில் எண்ணற்றவையாக இருப்பதுபோலவே,தம் மூல காரணத்திலும் வேறுபடுகின்றன.

ஆன்மீக குருக்களினல்லது தேசிய வீரர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும் பண்டிகைகள் சில,பருவங்களின் சாசுவத் கதிகளைக் கொண்டாடும் பண்டிகைகள் சில,இன்னும் சில பண்டிகைகள் மதங்களையும்,மக்கள் பொதுவாக நம்பும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டுள்ளன்.

நாம் ஒவ்வொரு பண்டிகையினுடைய பொருளையும் நோக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அப்படி ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி நாள
ன்று கொண்டாடப்படும் குருபூர்ணிமாவை பற்றி கீழே காண்போம். நன்றி...

Saturday, January 16, 2010

பாலவிகாஸ்

பாலவிகாஸ் என்றால் என்ன....
பால என்றால் மொட்டு
விகாஸ் என்றால் மலர்வது
மொட்டு மலர்வது போல சின்ன வயதிலே நல்ல விசயங்களை கற்று தந்தால் பின்னாளில் மிக நன்மையாக இருக்கும். அப்படி நான் கற்றதையும் கற்று கொண்டிருப்பதை புத்தகவடிவில் வந்திருப்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
இந்த வகுப்பு ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்களில் ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் சுமார் 9 வருடங்கள் சொல்லித் தரும் படிப்பு...
அதில் முதல் மூன்று வருடங்கள் சின்ன சின்ன ஸ்லோகங்களும் அதன் தொடர்பாக உள்ள கதைகளும் நல்ல செயல்கள் பற்றி எல்லாம் எடுத்துரைப்பார்கள்...
அடுத்த மூன்று ஆண்டுகள்....அஷ்டோத்திரம்,ஸுப்ரபாதம்,இதற்கென பாடத்திட்டத்தில் உள்ள இராமயணம்,மகாபாரதம் போன்ற கதைகளும்,மேலும் உள்ள சில கதைகளும் பாடல்களும் கற்று தருவார்கள்...
அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகள்...பஜகோவிந்தம்,வாழ்ந்த சில பெரிய மகான்களில் கதைகள் என நம்மை பண்படுத்த வைத்து நாமும் இதனை சொல்லி தரும் அளவிற்கு தனித்திறமைகள் பல வளர்த்து கொள்ளும் வாய்ப்புகளை இந்த வகுப்புகள் மூலம் பல நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பார்கள்.புத்தகத்தில் உள்ளதையும் சின்ன விளக்கங்களுடன் கொடுக்க முயற்சிக்கிறேன்.


Saturday, January 9, 2010

ஓம்காரம்

ஸ்லோகங்களின் உச்சரிப்பு என்பது மிக முக்கியம்.நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது சிரத்தையுடன் படிக்க வேண்டும் என்பதை இல்லை என்றால் தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லுவார்கள்...அப்பொழுது தான் நாம் அதனை முழுமனதோடு சொல்லுவோம் என்று சொல்லுவார்கள். ஸ்பஷ்டமாக நம்மால் சொல்ல முடியாமல் போனாலும் ஒரளவு அதன் அர்த்தத்தை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளலாம் என்பதே என் கருத்து. எல்லா வார்த்தைகளுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது..அதனை புரிந்து கொண்டு நாம் படித்து பழகுவோம். ஆதிகாலத்திலே தோன்றியது தான் ஓம் என்ற மந்திரம். அ,உ,ம் என்ற மூன்றேழுத்தின் மொத்தம் "ஓம்" அ என்பதை நம் அடி வயிற்றில் இருந்து கொண்டு வந்து உ என்பதை நம் தொண்டையில் உச்சரித்து ம் என்று நம் உதட்டில் முடியும். இந்த ஓம் என்ற மந்திரம் பொதுவாக இம்மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு தான் பாடத்தை தொடங்குவோம். இறைவன் நம் இடத்திற்கு இவ்வொலியின் மூலம் வந்து அமர்வதாக எண்ணி நாம் இதனை செய்கிறோம். ச ரி க ம ப த நி ச...எனற ஒலிகள் தான் முதலில் தோன்றியதாக சொல்லுவர்.ஆனால் அதற்கு முன்பே இந்த ஓம்காரம் தோன்றியது எனவும் சொல்வார்கள். அப்படிப்பட்ட இந்த மந்திரத்தை ஒரு ஸ்லோகம் மூலம் நாம் இங்கு பார்ப்போம்... இங்கு நான் ஸ்கன் செய்ததை பதிவு செய்கிறேன்...

ஸ்லோகம் அதன் அர்த்தமும் அதன் தொடர்பான கதையும் கொடுக்கிறேன். நன்றி...

Followers

About Me

Spreading goodness will gives the feeling of goodness only!Help ever Hurt Never is thing to follow in our life which is very simple