ஸ்துதிகள்
ஸ்துதிகள் இறைவனைப்
புகழும் பாடல்களாகும்.இறைவனின் பலவிதத் தெய்வீக அம்சங்களை வர்ணித்து அவரைப் புகழ்கினறன.
இறைவனின் மென்மையையும்,புகழையும்
என்றும் தியானித்திருப்பின் ஒருவர் தெய்வீகக் களிப்பில் அவன் மகிழ்திருப்பான்.தெய்வீகப்
பேரானந்தத்தை அடைவான்.
ஓம்கார ஸ்லோகம்:-
”ஓம்காரம் பிந்து ஸம்யுக்தம்
நித்யம் த்யாந்தி யோகின:
காமதம் மோஷதம் சைவ
ஓம்காராய நமோ நம:”
பதவுரை:
ஓம்காரம் – ஓம்காரத்தை,பிரணவத்தை
பிந்து ஸம்யுக்தம்
– பிந்துவுடன் கூடியதை
யோகின – யோகிகள்
நித்யம் – தினந்தோறும்
(அல்லது) எப்போதும்
த்யாந்தி – தியானிக்கிறார்கள்
தா – கொடுத்தல்
காம – ஆசைகள்,விருப்பங்கள்
காமதம் – ஆசைகள்,விருபங்கள்
இவற்றை நல்கும்
மோஷதம் + ச + ஏவ
= மோஷதம்சைவ மோஷதம் + ச + ஏவ + தம் = வீடுபேற்றையும் உறுதியாக நல்கும்
ஓம்காராய – ஓம்காரத்திற்கு
நம: + நம: = நமோ
நம: நம – வணக்கம்
பொழிப்புரை:
பிந்துவுடன் கூடிய ஓம்காரத்தை யோகிகள் எப்போதும்
தியானிக்கிறார்கள்.ஆசைகள்;விருப்பங்கள் – இவற்றை நல்குவதும்;வீடுபேற்றை உறுதியாக அளிப்பதும்
ஆகிய
(அந்த) ஓம்காரத்திற்கு
வணக்கம்.
[ ஓம் என்பது இறைவனின் ஒலிக் குறி. ஜீவாத்மாவைக்
குறிக்கும்.பிந்துவானது அருவமாகிய ஓம் என்னும் ஒலிக்குறி
காட்டும் பரமாத்மாவோடு
இணைகிறது.இந்த நிரந்தரமான இணைப்புறவைத்தான் யோகியர் தியானஞ் செய்கிறார்கள்.]
சுபதினம்.... அன்பு
நல்வாழ்த்துக்கள்…
வாழ்க நலமுடன்
வாழ்க வளத்துடன்
No comments:
Post a Comment