பார்வையிட்டவர்கள்

இறை பிரார்த்தனையின் அடித்தளம்.

Friday, August 5, 2016

ஸ்துதிகள்

ஸ்துதிகள்
ஸ்துதிகள் இறைவனைப் புகழும் பாடல்களாகும்.இறைவனின் பலவிதத் தெய்வீக அம்சங்களை வர்ணித்து அவரைப் புகழ்கினறன.
இறைவனின் மென்மையையும்,புகழையும் என்றும் தியானித்திருப்பின் ஒருவர் தெய்வீகக் களிப்பில் அவன் மகிழ்திருப்பான்.தெய்வீகப் பேரானந்தத்தை அடைவான்.
ஓம்கார ஸ்லோகம்:-
”ஓம்காரம்  பிந்து   ஸம்யுக்தம்
நித்யம்    த்யாந்தி  யோகின:
காமதம்  மோஷதம்  சைவ
ஓம்காராய  நமோ  நம:”
பதவுரை:
ஓம்காரம் – ஓம்காரத்தை,பிரணவத்தை
பிந்து ஸம்யுக்தம் – பிந்துவுடன் கூடியதை
யோகின – யோகிகள்
நித்யம் – தினந்தோறும் (அல்லது) எப்போதும்
த்யாந்தி – தியானிக்கிறார்கள்
தா – கொடுத்தல்
காம – ஆசைகள்,விருப்பங்கள்
காமதம் – ஆசைகள்,விருபங்கள் இவற்றை நல்கும்
மோஷதம் + ச + ஏவ = மோஷதம்சைவ மோஷதம் + ச + ஏவ + தம் = வீடுபேற்றையும் உறுதியாக நல்கும்
ஓம்காராய – ஓம்காரத்திற்கு
நம: + நம: = நமோ நம: நம – வணக்கம்
பொழிப்புரை:
பிந்துவுடன் கூடிய ஓம்காரத்தை யோகிகள் எப்போதும் தியானிக்கிறார்கள்.ஆசைகள்;விருப்பங்கள் – இவற்றை நல்குவதும்;வீடுபேற்றை உறுதியாக அளிப்பதும் ஆகிய
(அந்த) ஓம்காரத்திற்கு வணக்கம்.
[ ஓம் என்பது இறைவனின் ஒலிக் குறி. ஜீவாத்மாவைக் குறிக்கும்.பிந்துவானது அருவமாகிய ஓம் என்னும் ஒலிக்குறி
காட்டும் பரமாத்மாவோடு இணைகிறது.இந்த நிரந்தரமான இணைப்புறவைத்தான் யோகியர் தியானஞ் செய்கிறார்கள்.]


சுபதினம்.... அன்பு நல்வாழ்த்துக்கள்…
வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன்

Followers

About Me

Spreading goodness will gives the feeling of goodness only!Help ever Hurt Never is thing to follow in our life which is very simple